வக்கீல் கொலை முயற்சி வழக்கு: 3 பேர் கைது
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் வக்கீல் கொலை முயற்சி வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவில் கக்கன் நகரைச் சேர்ந்த காமராஜ் மகன் தங்கவிக்ரம், 42; வழக்கறிஞர். இவர், கடந்த 9ம் தேதி காலை செட்டித் தெருவில் டீ குடித்துவிட்டு நடைப் பயிற்சி சென்றார். எதிரே நடந்து வந்த சிலர், தங்கவிக்ரமை வீச்சருவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் தங்கவிக்ரமிற்கு பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு, தஞ்சை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எஸ்.பி., விவேகனந்தன் சுக்லா உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து, காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஜம்புலிங்கம்,46; என்பவருக்கும், வக்கீல் தங்கவிக்ரமுக்கும் தகராறு ஏற்பட்டு ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. அதன் காரணமாக தங்கவிக்ரம், ஜம்புலிங்கம் மனைவி நிலவழகியை தாக்கியுள்ளார். அதனால், கூலிப்படையை வைத்து தங்கவிக்ரமை கொலை செய்ய முயன்றது தெரியவந்துது.
இந்த வழக்கில், ஜம்புலிங்கத்தின் மனைவி நிலவழகியை,40; காட்டுமன்னார்கோவில் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், ஜம்புலிங்கம், 46; ஈரோடு மாவட்டம், காளவாடி அடுத்த கோட்டமலத்தைச் சேர்ந்த மாதேவன் மகன் ரமணன், 30; ஆகியோரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், மதுரையைச் சேர்ந்த கூலிப்படை மூலம், தங்கவிக்ரமை கொலை செய்யும் நோக்கில், தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.
மேலும்
-
இந்திய அணி 223 ரன் குவிப்பு; அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான் அதிரடி
-
நேபாளத்தில் மீண்டும் கடும் வெள்ளப் பெருக்கு; 30 வீடுகள், பாலங்கள் சேதம்
-
மாற்றத்தை பெண்கள் ஏற்படுத்த வேண்டும்: அண்ணாமலை வேண்டுகோள்
-
ரஷ்யா - உக்ரைன் போரில் உடன்பாடு; அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
-
ஆன்லைன் மோசடி விவகாரம்: எட்டு முதலீட்டாளர்கள் கைது
-
நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியில் நவராத்திரி கொலு, கலை விழா