மாற்றத்தை பெண்கள் ஏற்படுத்த வேண்டும்: அண்ணாமலை வேண்டுகோள்

அவிநாசி: உலகப் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, அவிநாசியில் நடைபெற்ற மாரத்தானில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று, ஆறு கி.மீ., தூரம் ஓடினார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு சார்பில், இன்று (அக்., 11) காலை 'மகளிர் சக்தி மாரத்தான் -2026' என் நிகழ்ச்சி நடந்தது. அதில், மாணவியர் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

தேவராயன்பாளையம் பிரிவில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம், மங்கலம் ரோடு பைபாஸ், அவிநாசி பஸ் நிலையம், திருப்பூர் ரோடு வழியாக சென்று, தொடங்கிய இடத்தை வந்தடைந்தது. பங்கேற்ற அனைவருக்கும் டி-ஷர்ட், சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

அமைப்பின் தலைவர் அண்ணாமலை, ஆறு கி.மீ., துாரத்துக்கு, போட்டி பாதை முழுவதும் ஓடி, பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தினார். இதுபோல, பல்லடம் அடுத்த பொங்கலுார், அலகுமலையில், நடந்த விழிப்புணர்வு மாரத்தானை, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அண்ணாமலை பேசியதாவது: பெண் குழந்தைகள், தங்கள் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி, சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காகவே, அக்.11ல், சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள், சமுதாயத்தில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும்.

அவிநாசியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சகோதரிகள், ஒரே இடத்தில் ஒன்று கூடியது, மிகப்பெரிய சாதனை. பெண்களுக்கு, பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவது 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலையாய கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பு வீடியோ!




அவிநாசியில் மாரத்தான் போட்டியை துவங்கி வைத்து அண்ணாமலை பேச்சு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

https://www.youtube.com/live/ZO_N8mWJpE4?si=bmdEVEO3a-6_8jR5

Advertisement