நேபாளத்தில் மீண்டும் கடும் வெள்ளப் பெருக்கு; 30 வீடுகள், பாலங்கள் சேதம்
காத்மாண்டு: நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் அதைத் தொடர்ந்து புதி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 30க்கும் மேற்பட்ட வீடுகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. கரையோரம் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், கடந்த ஆக., 26ல், திபெத் எல்லையை ஒட்டிய இமயமலை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 1,400க்கும் அதிகமானோர் பலியாகினர்; 5.000க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இந்த கோர விபத்தில் சாலைகள், பாலங்கள், முக்கிய நீர்மின் திட்டங்கள் உள்ளிட்டவை தரைமட்டமாகின.
இந்த அதிர்ச்சியில் இருந்து நேபாள மக்கள் இன்னும் மீளாத நிலையில், தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள கோர்கா மாவட்டத்தில், திரிசூலி ஆற்றின் துணை ஆறான புதி கண்டகி ஆற்றில் இன்று (அக் 11) பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், கரையோரம் இருந்த 30க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
சும்னுப்ரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டு, பின் தண்ணீர் பெருக்கெடுத்து பெருவெள்ளமாக பாய்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கர சத்தத்துடன் ஆர்ப்பரித்து சென்ற வெள்ளத்தில், பாறைகள், மரங்கள், கார்கள், கட்டட இடிபாடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
அடர்ந்த கருப்பு நிறத்தில் பாய்ந்தோடிய வெள்ளம், ஆற்றங்கரையோரம் இருந்த ஜகத், பயியு, சல்லேரி, பாகர் கிராமங்களில் புகுந்தது. இதில், வாகனங்கள் செல்லக்கூடிய இரும்பு பாலம் மற்றும் இரண்டு தொங்கு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
புதி கண்டகி நீர்மின் திட்டத்தின் கட்டுமான முகாம் மற்றும் உபகரணங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறித்து தகவல் தெரிந்ததை அடுத்து, கரையோர கிராம மக்கள் உடைமைகளை விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும்
-
இந்திய அணி 223 ரன் குவிப்பு; அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான் அதிரடி
-
மாற்றத்தை பெண்கள் ஏற்படுத்த வேண்டும்: அண்ணாமலை வேண்டுகோள்
-
ரஷ்யா - உக்ரைன் போரில் உடன்பாடு; அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
-
வக்கீல் கொலை முயற்சி வழக்கு: 3 பேர் கைது
-
ஆன்லைன் மோசடி விவகாரம்: எட்டு முதலீட்டாளர்கள் கைது
-
நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியில் நவராத்திரி கொலு, கலை விழா