தெலுங்கனுார் அகழாய்வில் பழமையான குறியீடுகள் கண்டெடுப்பு
–நமது நிருபர்–
தெலுங்கனுார் அகழாய்வில், தொடர்ச்சியாக ஐந்து பழமையான குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழக தொல்லியல் துறை சார்பில், சேலம் மாவட்டம், மேட்டூர் அணையை ஒட்டிய, தெலுங்கனுாரில் உள்ள பழமையான புதைப்பிடத்தில், அகழாய்வுப் பணி நடக்கிறது. அங்கு, வெவ்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்பட்ட, வெவ்வேறு புதைப்பு முறைகளான, குழி தோண்டி புதைத்தல், ஈமத்தாழிக்குள் புதைத்தல், ஈமப் பேழைக்குள் புதைத்தல் உள்ளிட்ட அனைத்து முறைகளும், ஒரே இடத்தில் கிடைத்துள்ளன.
இந்நிலையில், தற்போது, கோடரி, ஈட்டி, அம்புகள், கத்திகள், ஆணிகள் உள்ளிட்ட இரும்பு பொருட்களுடன், பெருங்கற்காலத்திற்கு முன்பிருந்து இரும்பு காலம் வரையில் வாழ்ந்த மனிதர்களின், தொல்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மிக முக்கியமாக, இரண்டு கருப்பு – சிவப்பு பானை ஓடுகளில், தொடர்ச்சியாக, ஒரே மாதிரியான, ஐந்து ‘கிராபிட்டி’ எனும் கீறல் குறியீடுகள், மாறுபட்ட வரிசையில் கீறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை, தமிழகத்தில் எழுத்து புழக்கத்தில் வருவதற்கு முன், தொடர்பியலுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஏற்கனவே, இப்பகுதியில், 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு வாள் கிடைத்துள்ள நிலையில், இந்த பானை கீறல்களும் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும்
-
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு 3 கடைக்கு ரூ.15,000 அபராதம் விதிப்பு
-
அரளி பூ விலை உயர்வு
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
-
யு.பி.ஐ., பண பரிவர்த்தனை மறைமுக வரி விதிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
-
பைக் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் பலி
-
கவர்னர் பதவியை ஆட்டு தாடியுடன் ஒப்பிட்ட திமுக அவரின் அதிகாரங்கள் குறித்து பேச துவங்கியது எப்போது?: ஐகோர்ட் கேள்வி