போதை ஊசி பயன்படுத்திய பள்ளி ஓவிய ஆசிரியர் கைது
சென்னை: போதை ஊசி செலுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பழக்கம் உள்ள தனியார் பள்ளி ஓவிய ஆசிரியரும், அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார், 26; தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர். இவர், அயனாவரம், லோகநாதன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்தார். இவருக்கு, மெத்ஆம்பெட்டமைன் போதை ஊசி செலுத்தி, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரை அடுத்து, சென்னை போலீசின் ஏ.என்.டி.எப்., எனும் போதை பொருள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, செயலி ஒன்றின் வாயிலாக, மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, நவீன்குமார் வாயிலாக, அவரது கூட்டாளியான, திருநின்றவூர், ஸ்ரீசாய் ஈஸ்வர் நகரைச் சேர்ந்த தாவூத், 41 என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்து 4 கிராம் மெத் ஆம்பெட்டமைன் சிக்கியது.
தாவூத்திடம் விசாரித்தபோது, அவரது நண்பரான, கண்டிகையைச் சேர்ந்த சதீஷ்குமார், 32 என்பவர், 4,000 ரூபாய்க்கு மெத் ஆம்பெட்டமைன் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து, சதீஷ்குமாரை பிடித்து, அவரது வீட்டில் நடத்த சோதனையில் 26 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. சதீஷ்குமாருக்கு, கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த விஷால் என்பவர், கூரியரில் மெத் ஆம்பெட்டமைன் அனுப்பி வைப்பது தெரியவந்தது. நவீன்குமார், தாவூத், சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விஷாலை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்
-
ரூ.43 கோடி கடத்தல் போதைபொருள் பறிமுதல்; கடத்தல்காரர்கள் 2 பேர் கைது
-
தேர்தல் ஆணையர் விவகாரத்தில் தலையிடுவது ஏன்? கரப்பான் அமைப்பினருக்கு மத்திய அமைச்சர் கேள்வி
-
சவுதி அரேபியாவில் நடந்த தாக்குதலில் இந்தியர் பலி... 11 பேர் காயம்; தூதரகம் தகவல்
-
சிறுமி 5 மாதம் கர்ப்பம் :வாலிபர் மீது ' போக்சோ'
-
22 கிலோ கஞ்சா பறிமுதல்: போடியில் இருவர் கைது
-
சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் மீது தாக்குதல்தடுத்த இரு போலீசார் காயம்