தேர்தல் ஆணையர் விவகாரத்தில் தலையிடுவது ஏன்? கரப்பான் அமைப்பினருக்கு மத்திய அமைச்சர் கேள்வி
புதுடில்லி: தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் பதவி ராஜினாமா செய்ய வலியுறுத்தி கரப்பான் அமைப்பினர் டில்லியில் போராட்டம் நடத்த முயன்றனர். சுமார் 4,000 பேர் கைது செய்யப்பட்டனர். தடுப்பு காவலுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இன்றும் அவர்கள் போராட்டத்தை தொடர்வதால் டில்லியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஓட்டு திருட்டு என தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அவர் பேசியதாவது; ஓட்டு திருட்டு நடந்ததாக குற்றம்சாட்டும் ராகுலிடன் ஒன்றை கேட்க விரும்புகிறேன். அவர் வெற்றி பெற்ற தொகுதியில் எங்களின் ஓட்டு திருடப்பட்டதாக சொல்லலாமா?
டில்லியில் போராட்டம் நடத்தும் கரப்பான் பூச்சி அமைப்பினர், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தீர்கள். அதனை ஏற்று அவர் ராஜினாமா செய்து விட்டார். இப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டிய அவசியம் என்ன? என்று சாடியுள்ளார்.
மேலும்
-
சவுதி அரேபியாவில் நடந்த தாக்குதலில் இந்தியர் பலி... 11 பேர் காயம்; தூதரகம் தகவல்
-
சிறுமி 5 மாதம் கர்ப்பம் :வாலிபர் மீது ' போக்சோ'
-
22 கிலோ கஞ்சா பறிமுதல்: போடியில் இருவர் கைது
-
சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் மீது தாக்குதல்தடுத்த இரு போலீசார் காயம்
-
குறிச்சி குளத்துக்கு வந்த வெளிநாட்டு விருந்தினர்கள்!
-
போதை ஊசி பயன்படுத்திய பள்ளி ஓவிய ஆசிரியர் கைது