விசுவ ஹிந்து பரிஷத் நவராத்திரி விழா

புதுச்சேரி: புதுச்சேரி மாநில விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், 6ம் ஆண்டு நவராத்திரி பெருவிழா, துர்கா பூஜை நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

2ம் நாளான நேற்று மாலை தக் ஷிண காளி மூலமந்திர ஹோமம், அசோக் சிங்கால் நுாற்றாண்டு விழா சிறப்புரை நடந்தது. தொடர்ந்து, நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

நிகழ்ச்சியில், முன்னாள் சபாநாயகர் செல்வம், வட தமிழக மாநில துணை தலைவர் ஞானகுருஜி கலந்து கொண்டார். வரும் 21ம் தேதி வரை நடக்கும் நவராத்திரி விழாவில், தினமு ம் மாலை 6:00 முதல் 9:00 மணி வரை புதுச்சேரி காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளின் திருவுருவம் பிரதிஷ்டை செய்து யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விசுவ ஹிந்து பரிஷத் புதுச்சேரி மாநில தலைவர் ரவிக்குமார், செயலர் நந்தகுமார், வட தமிழக இணை அமைப்பாளர் இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement