மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு:திருச்செங்கோட்டில், மா.கம்யூ., கட்சி சார்பில், டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தலைவர்களை கைது செய்த காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகர செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். அதில், 13 கோடி வாக்காளர்களை நீக்கிய இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கண்டித்தும், மோடி அரசை கண்டித்தும், இடதுசாரி கட்சிகளின் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

Advertisement