காமராஜர் பெயரை மறந்த ராகுல்; காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி
- நமது நிருபர் -
சென்னையில், மாணவர்களுடன் கலந்துரையாடிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் தலைமையிலான காங்., ஆட்சியின் சாதனைகளை பேசாதது, காங்., கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தீவுத்திடலில், நேற்று முன்தினம், காங்., சார்பில் நடைபெற்ற 'மாணவர்கள் குரல்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார். ராகுலுடன் முதல்வர் விஜயும் வருவார் என கூறப்பட்டால், பல மணி நேரமாக, மாணவர்கள் காத்திருந்தனர்.
ஆனால், ராகுல் மட்டும் கால தாமதமாக, இரவு 7:00 மணிக்கு வந்தார். முதல்வர் விஜய் வரவில்லை என்றதும், மாணவர்கள் வெளியேற தொடங்கினர். இதனால், நிகழ்ச்சிக்கு ராகுல் வந்தபோது மாணவர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவில் இல்லை.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல், 'காங்கிரசை ஒழிக்க வேண்டும்' என பேசிய ஈ.வெ.ரா., பற்றி புகழ்ந்து பேசினார். அவரைப்பற்றி மாணவர்களிடமும் பெருமையாக ராகுல் கூறினார். ஆனால், தமிழகத்தில் காங்., கட்சியின் முகமான காமராஜர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
தமிழகத்தில் காமராஜர் தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள் மற்றும் காமராஜரின் பெருமைகளை ராகுல் பேசவில்லை. இது, தமிழக காங்கிரஸ் கட்சியினரிடம் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, நிகழ்ச்சியில் பங்கேற்ற, மூத்த தலைவர் திருநாவுக்கரசர், அமைச்சர் ராஜேஷ்குமார், புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் போன்றோர் துாங்கி வழிந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது. இது தொடர்பாக, தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர்களும், எதிர் கோஷ்டிகளும், கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (22)
பேசும் தமிழன் - ,
12 அக்,2026 - 19:41 Report Abuse
பாவம்... ராகுலுக்கு காமராஜர் யார் என்று கூட தெரியாமல் இருக்கலாம்..... அவர் கான் கிராஸ் கட்சி என்றால்... கொள்ளு தாத்தா நேரு.... பாட்டி இந்திரா... அப்பா ராஜீவ்..... அம்மா சோனியா... இவர்கள் தான் கான் கிராஸ் கட்சி என்று நினைத்து இருப்பார்.... உண்மையான கான் கிராஸ் கட்சி ஆட்கள் யாரையும் இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 0
0
Reply
Vijay Sundravel - Salem,இந்தியா
12 அக்,2026 - 16:22 Report Abuse
கட்சியின் பிளவு மற்றும் முதல் நேரடி மோதல் 1971 நாடாளுமன்றத் தேர்தல்:
1969-ல் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்த பிறகு இந்திரா காங்கிரஸ் மற்றும் ஸ்தாபன காங்கிரஸ் - Congress-O, காமராசரின் ஸ்தாபன காங்கிரஸ் தமிழ்நாட்டில் பலமாக இருந்தது.
1971 மக்களவைத் தேர்தலில், இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி, காமராசரை வீழ்த்த திமுகவுடன் DMK மாபெரும் கூட்டணி அமைத்துத் போட்டியிட்டது.
இந்தத் தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், இந்திரா காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. காமராசர் அணி பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தல் 1971:
தமிழகத்தின் பெருந்தலைவரான காமராசர் தனது சொந்தத் தொகுதியான விருதுநகரில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டார்.
அவரைத் தோற்கடிக்க இந்திரா காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அனைத்து பலத்தையும் பிரயோகித்தது. திமுகவின் ஆதரவோடு களமிறங்கிய இந்திரா காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளரிடம் காமராசர் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. இது காமராசருக்கு மட்டுமல்லாமல் தேசிய அரசியலுக்கே ஒரு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்திரா காந்தி மற்றும் தலைவர்களின் விமர்சனங்கள்:
காமராசரை அரசியல் ரீதியாக முடக்க இந்திரா காந்தி மற்றும் அவரது கூட்டணிக் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
"பழமைவாதிகள்" மற்றும் "சோசலிசத்திற்கு எதிரானவர்கள்" என்று காமராசரையும் அவரது கட்சியினரையும் இந்திரா காந்தி கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் காமராசரின் செல்வாக்கைக் குறைக்க திமுக தலைவர்களும் இந்திரா காந்தியுடன் கைகோர்த்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
ஜனதா கட்சியாக மாறுதல் 1977:
நெருக்கடி நிலைக்குப் பிறகு 1977, ஸ்தாபன காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் இணைந்து ஜனதா கட்சி உருவானது. காமராசர் அதற்கு முன்னரே 1975-ல் காலமானார் என்றாலும், அவர் வாழ்ந்த காலத்தில் காங்கிரஸின் அதிகாரப் போட்டிகளாலும், திமுக-இந்திரா காங்கிரஸ் கூட்டணியாலும் தீவிர அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டார். 0
0
Reply
Proud Indian - Chennai,இந்தியா
12 அக்,2026 - 16:21 Report Abuse
திருக்குறளை மலம என்று சொன்ன ஈர வெங்காயத்தையும், திருவள்ளுவரையும் தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகள் என்றார். இவருக்கு திருக்குறளும் தெரியாது, காமராஜரும் தெரியாது 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
12 அக்,2026 - 16:20 Report Abuse
ராகுல் அவர் அப்பாவையே மறந்திருப்பார்! 0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
12 அக்,2026 - 13:05 Report Abuse
காமெடி பீஸ் ராகு 0
0
Reply
Kumar K R - cairo,இந்தியா
12 அக்,2026 - 12:39 Report Abuse
உண்மையான கரப்பான்பூச்சி காங்கிரஸ் தான் கரப்புகள் வெட்கப்படுகின்றன வேதனைப்படுகின்றன. 0
0
Reply
govind - ,
12 அக்,2026 - 11:57 Report Abuse
அடுத்த காங்கிரஸ் கூட்டத்தில் பேரறிவாளனை புகழ்ந்து ராகுல் பேசுவார் என்று எதிர்பார்க்கலாம். 0
0
Reply
Kannan Chandran - Manama,இந்தியா
12 அக்,2026 - 11:48 Report Abuse
காங்கிரஸ்காரன் எழுதி கொடுத்ததைதானே பார்த்து படித்து சென்றது அந்த தலைமை தற்குறி. பின்னர் ஏன் காங்கிரஸ்காரன் அதிர்ச்சி? 0
0
Barakat Ali - Medan,இந்தியா
12 அக்,2026 - 15:06Report Abuse
சூப்பர்ப் ...... 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
12 அக்,2026 - 11:47 Report Abuse
செல்லாபெரும்தொகை ஒரு கலபடமில்லாத திமுக . மாணிக்ககம் தாக்குர் அக்மார்க் தவெக. அவ்வளவுதான் 0
0
Reply
Sun - ,
12 அக்,2026 - 10:50 Report Abuse
இப்ப உள்ள மாணிக் தாகூர் தலைமையிலான தமிழக காங்கிரஸ் த.வெ.கவின் ஒரு அங்கம் போலவே இங்கு செயல் படுகிறது. அதனால்தான் காமராஜரை மறந்து விட்டு த.வெ.கவின் கொள்கைத் தலைவரான பெரியாரின் புகழைப் பாடி இருக்கிறார் ராகுல். 0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
பயங்கரவாதியே, ஏன் இங்கு வந்தாய்; நியூயார்க்கில் முகமது யூனுஸ்க்கு கடும் எதிர்ப்பு
-
மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம்
-
விவசாயிகளின் விவரங்களை துல்லியமாக பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
-
தாசில்தார், சார் பதிவாளருக்கு ‘பிடிவாரண்ட்’ திட்டக்குடி சப் கோர்ட் நீதிபதி அதிரடி
-
கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது
-
சில்லறை விற்பனை டீசல் பங்க் கோரி பழையாரில் 2 வது நாளாக போராட்டம்
Advertisement
Advertisement