சின்னதாராபுரம் அருகே குடிநீர் வினியோகம் பாதிப்பு
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அடுத்த சின்னதாராபுரம் பகுதியில் உள்ள காட்டாம்புதுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த, 20 நாட்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து, ஊராட்சி செயலாளரிடம், பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் குடிநீர் பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
எனவே, குடிநீர் வினியோகத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, தேவையான மின்மோட்டார் வசதிகளை ஏற்படுத்தி, போதிய அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில் அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
பயங்கரவாதியே, ஏன் இங்கு வந்தாய்; நியூயார்க்கில் முகமது யூனுஸ்க்கு கடும் எதிர்ப்பு
-
மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம்
-
விவசாயிகளின் விவரங்களை துல்லியமாக பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
-
தாசில்தார், சார் பதிவாளருக்கு ‘பிடிவாரண்ட்’ திட்டக்குடி சப் கோர்ட் நீதிபதி அதிரடி
-
கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது
-
சில்லறை விற்பனை டீசல் பங்க் கோரி பழையாரில் 2 வது நாளாக போராட்டம்