ஜல்லி பெயர்ந்த சாலையால் அவதி
கரூர்:வெள்ளியணை அருகே, கற்கள் பெயர்ந்த நிலையில் தார்ச்சாலை உள்ளதால், பொது மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர்
மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்., யூனியன் தாளப்பட்டி கிராம
பஞ்சாயத்தில், செங்காளிப்பாளையம் முதல் ராகுபுரம் வழியாக
தாளப்பட்டி செல்லும் தார்ச்சாலை பல ஆண்டுகளுக்கு முன்
அமைக்கப்பட்டது. தற்போது, தார்ச்சாலையில் கற்கள்
பெயர்ந்துள்ளதால், பொதுமக்களால் நடந்துகூட செல்ல முடியாமல்
அவதிப்படுகின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் டூவீலர்களில்
செல்கிறவர்கள், தவறி விழுந்து காயமடைகின்றனர். தார்ச்சாலையின்
இருபுறமும், சீமை கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இந்த சாலை வழியாக
அரசு, தனியார் பஸ்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் சென்று
வருகின்றன.
எனவே, கற்கள் பெயர்ந்துள்ள தார்ச்சாலையை சீரமைத்து,
முட்புதர்களை அகற்ற கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டியது அவசியம்.
மேலும்
-
பயங்கரவாதியே, ஏன் இங்கு வந்தாய்; நியூயார்க்கில் முகமது யூனுஸ்க்கு கடும் எதிர்ப்பு
-
மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம்
-
விவசாயிகளின் விவரங்களை துல்லியமாக பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
-
தாசில்தார், சார் பதிவாளருக்கு ‘பிடிவாரண்ட்’ திட்டக்குடி சப் கோர்ட் நீதிபதி அதிரடி
-
கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது
-
சில்லறை விற்பனை டீசல் பங்க் கோரி பழையாரில் 2 வது நாளாக போராட்டம்