பயங்கரவாதியே, ஏன் இங்கு வந்தாய்; நியூயார்க்கில் முகமது யூனுஸ்க்கு கடும் எதிர்ப்பு

வாஷிங்டன்: வங்கதேச முன்னாள் இடைக்கால அரசுத் தலைமை ஆலோசகரும், நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ் நியூயார்க் விமான நிலையம் வந்தபோது வங்கதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்கு பிறகு நிலவிய அரசியல் குழப்பங்கள், வன்முறைகள், சட்ட ஒழுங்கு சீர்குலைவு மற்றும் காவலர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுதான் காரணம் என போராட்டக் காரர்கள் குற்றம் சாட்டினர்.

விமான நிலைய முனையத்தில் இருந்து அவர் வெளியேற முயன்ற போது, அங்கிருந்த மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு "நீ ஒரு பயங்கரவாதி" , "வங்கதேசத்தின் ஜனநாயகத்தை அழித்துவிட்டாய்" மற்றும் "இங்கிருந்து திரும்பிப் போ" போன்ற கடுமையான கோஷங்களை எழுப்பினர்.

பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை உடனடியாக மீண்டும் விமான நிலைய முனையத்தின் உள்ளேயே பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

Advertisement