மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், செஞ்சி, அவலுார்பேட்டை, வல்லம் கிளைகள் சார்பில், மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மேல்வயலாமூர், கோணை, மேல்சித்தாமூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகங்களில், வங்கியின் இணைப்பதிவாளர் தயாளன் தலைமையில் நடந்தது.

உதவி பொது மேலாளர் கணபதி, சங்க அலுவலர்கள் பாபு, ஆரோக்கியராஜா, ரவிச்சந்திரன், குணசேகரன், அஸ்வதி, சத்யா, காண்டீபன் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், ரூ.40.50 லட்சம் வைப்புத்தொகை வசூல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடன் ரூ.1 லட்சம், சிறு வணிக கடன் ரூ.3 லட்சம், நாட்டுப்புற கலைஞர்கள் கடன் ரூ.50 ஆயிரம், கைவினை கலைஞர்களுக்கான கடன் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. கோணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், 8 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.163 லட்சம் மேல் வயலாமூர் தொடக்க வேளாண்மை ஒரு குழுக் கடன் ரூ.4.80 லட்சம் வழங்கப்பட்டது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், 19 கிளைகள் மற்றும், 152 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு வகை கடன்கள் மற்றும் அரசு நலத்திட்ட கடன்கள் மானியம் மற்றும் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்குவது குறித்தும், ஏ.டி.எம்., பயன்பாடுகள் குறித்த விரிவான விளக்கங்கள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன் சங்க வைப்பு தாரர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement