தெரசம்மாள் ஆலயம் சார்பில் தேர்த்திருவிழா

கரூர்:கரூர் புனித குழந்தை தெரசா ஆலயத்தில், 96வது தேர்த்திருவிழா, நடந்தது.

பிரசித்தி பெற்ற, கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில், ஆண்டுதோறும் அக்., மாதம் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த, 2ல் காலை, பங்கு தந்தை ராயப்பன் தலைமையில், ஆலய வளாகத்தில் கொடியேற்று விழா நடந்தது. அதைதொடர்ந்து, நாள்தோறும் காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
நேற்று இரவு, கோவில் வளாகத்தில் இருந்து, வாண வேடிக்கையுடன், முக்கிய வீதிகள் வழியாக தேர்த்திருவிழா நடந்தது. அதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அதற்கான, ஏற்பாடுகளை புனித குழந்தை தெரசா ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement