பஸ்சில் முதியவரிடம் 3 பவுன், ரூ.8000 திருட்டு

அரவக்குறிச்சி:கரூர் மாவட்டம், காந்தி கிராமம் அருகே, டி.என்.எச்.எஸ்., காலனியை சேர்ந்தவர் சாமுவேல் சுந்தரபாண்டியன், 72;

இவர், கடந்த, 4ல் சேலத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்சில், கரூர் வரை செல்ல டிக்கெட் பெற்றுள்ளார். அப்போது, அவரது அருகில் அமர்ந்த மர்ம நபர் ஒருவர், மயக்க மருந்து கலந்த டீயை கொடுத்துள்ளார். டீ அருந்திய சில மணி நேரத்தில், முதியவர் மயங்கியுள்ளார்.பின், எழுந்து பார்த்தபோது, அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டிக்கோட்டை சுங்கச்சாவடியில் பஸ் நின்றுள்ளது. மேலும், தன் கழுத்தில் அணிந்திருந்த, மூன்று பவுன் செயின், 8,000 ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து முதியவர் சாமுவேல் சுந்தரபாண்டியன், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement