14ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு

கரூர்:கடவூர் இடையப்பட்டி மேற்கில், வரும், 14ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா நடக்கிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூர் மாவட்டம், கடவூர் அருகில் இடையப்பட்டி மேற்கில் வரும், 14ல், 11:00 மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா நடக்கிறது. இம்முகாமில் பல்வேறு அரசு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு விளக்க உள்ளனர். மேலும் மருத்துவ முகாம், அரசுத்துறைகள் சார்பாக கண்காட்சி ஆகியவை நடக்கவுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement