அரவக்குறிச்சி அருகே ஆடு, கோழி திருட்டு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, சாந்தப்பாடி கிராமம், செங்காளிவலசு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி செல்வி, 55; இவர், தன் வீட்டில் ஆடு, கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு, சொந்த வேலையாக அரவக்குறிச்சி சென்றார்.

பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் பீரோ கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவை திறந்து பார்த்தபோது, 2,000 ரூபாய் ரொக்கம் மற்றும் வீட்டில் இருந்த, 10,000 ரூபாய் மதிப்புள்ள ஆடு, 2,000 ரூபாய் மதிப்புள்ள கோழிகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து செல்வி அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement