வெளிநாட்டில் இருந்து வந்தவர் டூவீலர் விபத்தில் பலி: போலீசார் விசாரணை
சிவகங்கை: சிவகங்கை அருகே கருதிப்பட்டியில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த இளைஞர் டூவீலர் விபத்தில் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கவுரிப்பட்டி அருகே கருதிப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் 40. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் வெளிநாட்டில் வேலை செய்வதால் இவரது மனைவி குழந்தைகளுடன் தாய் வீடான மேலுார் அருகே கம்மாபட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். சிவக்குமார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு தனது சொந்த ஊரான கருதிப்பட்டிக்கு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக கம்மாபட்டி கிராமத்திற்கு டூவீலரில் சென்றார். கருதிப்பட்டி அருகே ரோட்டோர மரத்தில் மோதி சம்பவ இடத்தில் இறந்தார்.
எஸ்.ஐ., முத்துராமலிங்கம் விசாரணை நடத்தினார். சிவக்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
-
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருடிய 5 பேர் கைது
-
கலெக்டர் உத்தரவில் டாக்டர் 'சஸ்பெண்ட்'