முதல்வர் விஜயின் நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்; அமைச்சர் ராஜ்மோகன்

21

சென்னையில் அவர் அளித்த பேட்டி;

நாகரிக அரசியலுக்கான எடுத்துக்காட்டு தான் நேற்று(பிரதமர் மோடி, முதல்வர் விஜய் நிகழ்வை குறிப்பிடுகிறார்) நடைபெற்ற மேடை. நட்பு அரசியலுக்கான மேடை அதற்கு முந்தைய நாள் நிகழ்வில்(ராகுலுடன் முதல்வர் விஜய் பேசியது) தவெக என்ற கட்சியின் தலைவராக செயல்பட்டார்.

பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வராக விஜய் செயல்பட்டார். மேடையில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் மிக சரியாக உச்சரித்து, என்ன பேசவேண்டுமோ அதை எல்லாம் பேசி இருக்கிறார். தமிழர்களின், தமிழகத்தின் உரிமைக் குரலாக முதல்வர் ஒலித்திருக்கிறார்.

நதிநீர் இணைப்பை பேசியிருக்கிறார், வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும் என்று பேசியிருக்கிறார். பள்ளிக்கல்வியின் 5000 கோடி பணத்தை விடுவிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். எனவே, நேற்றைய மேடை மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மேடையையும் நாகரிக அரசியலாக கொண்டு சென்றிருக்கிறார்.

அவரிடம் இருக்கும் நாகரிக அரசியலை மற்ற தலைவர்களும் கற்றுக் கொள்ள வேண்டும், அதை பெற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் நல பணிகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. எந்த ஆட்சியில் இல்லாத அளவாக ஊழலே இல்லாததால் டெண்டர்கள் எடுக்கப்பட்டு வேகமாக பணிகள் நடக்கிறது. இது ஒரு தொடக்கமே, பல நல்ல திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் செய்து முடிக்கப்பட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேட்டியளித்தார்.

Advertisement