அரிசி விலை உயர்வால் சிறு குறு தானியத்திற்கு மாறும் விவசாயிகள்
சாயல்குடி: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு அரிசி வகைகளின் விலை கிலோவிற்கு ரூ.15 முதல் 25 வரை விலை உயர்ந்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நெல் வரத்து குறைந்துள்ளது. விலை ஏற்றத்திற்கும் காரணமாக உள்ளது. பருவமழை பற்றாக்குறை மற்றும் உற்பத்தி குறைவு மற்றும் பண்டிகை காலத்தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் கூறியதாவது:
அரிசி விலை கிலோவிற்கு ரூ.20 முதல் 25 வரை அதிகமாக உயர்வு கண்டுள்ளது. ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் காலை மற்றும் இரவு நேரங்களில் அரிசிக்கு மாற்றாக சிறுகுறு தானியங்களான கேழ்வரகு, தினை, வரகு, சாமை, பனி வரகு, குதிரைவாலி உள்ளிட்ட தானியங்களில் கவனம் செலுத்தி சமைக்கும் போக்கு பெருவாரியான பகுதிகளில் நடக்கிறது.
ஓட்டல்களில் ரூ.100 முதல் 170 வரை அரிசி சாதம் சாப்பாடு விலை ஏற்றப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கக்கூடிய அரிசி ஏழைகளுக்கு பயனுள்ளதாக அமைந்த நிலையில் ஒரு சிலர் சட்ட விரோதமாக அவற்றை சேகரித்து மொத்தமாக மூடைகளில் கட்டி கேரளாவிற்கு அனுப்பி வைக்கும் செயலும் சத்தம் இல்லாமல் அரங்கேறி வருகிறது.
எனவே அரிசி விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பெருவாரியாக பாதிப்பை சந்திக்கின்றனர் என்றனர்.
மேலும்
-
ஆடு மேய்க்கும் தொழிலாளி வீட்டிற்கு ரூ. 10 ஆயிரத்து 938 மின் கட்டணம்: 20 நாட்களாக இருளில் வசிக்கும் குடும்பம்
-
மின்வாரியத்தினர் ஆர்ப்பாட்டம்
-
வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை
-
தாலிக்கொடி பறித்தவர் 2 ஆண்டு கம்பி எண்ணனும்!
-
மாவட்ட தடகளப் போட்டி கோலாலகமான துவக்கம்!
-
ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியில் வாழ்க்கையில் வெல்லும் கல்வி முன்னெடுப்பு