தார் சாலை அமைக்க மக்கள் கோரிக்கை
ராமநத்தம்: ஆவட்டி அருகே கிராமத்தில் தார்சாலை அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவட்டி அடுத்த ஆ.குடிகாடு கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விவசாய நிலம் மற்றும் மயானத்திற்கு செல்ல கிராவல் பரப்பி சாலை போடப்பட்டது. அதன்பின் தார் அமைக்காததால், ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதனால், அவ்வழியே பைக்கில் செல்வோர் கற்களில் தவறி விழுந்து காயமடைவதாலும், விவசாய பயன்பாட்டிற்கு செல்லும் வாகனங்கள் பழுதடைவதாலும் அப்பகுதியினர் அவதியடைகின்றனர். மேலும், மழைக் காலத்தில் சாலை முழுவதும் சகதியாக மாறுவதால் மயானத்திற்கு பிரேதத்தை கொண்டு செல்ல மக்கள் கடும் சிரமமடைகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் மங்களூர் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே, ஆ.குடிகாடு கிராமத்தில் தார்சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்