எஸ்.சி., - எஸ்.டி., இடஒதுக்கீடு அதிகரிப்பு: கர்நாடக அரசு உத்தரவு ஐகோர்ட்டில் ரத்து
பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை அதிகரித்த அரசின் உத்தரவை, உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கர்நாடகாவில், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., அரசை வீழ்த்தி, காங்., ஆட்சிக்கு வந்தது. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், அதாவது 2023 ஜனவரியில் பா.ஜ.,வின் பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தார்.
பொது பிரிவினர் பாதிப்பு
அப்போது, கல்வி நிறுவனங்கள், அரசு வேலைகளில் எஸ்.சி., சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை 15ல் இருந்து 17 சதவீதமாகவும்; எஸ்.டி., சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை 3ல் இருந்து 7 சதவீதமாகவும் அதிகரித்து பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சமூக ஆர்வலர் மகேந்திர குமார் மிஸ்ரா, உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி ஹேமலேகா அமர்வு விசாரித்து வந்தது.
மனுதாரரான மகேந்திர குமார் மிஸ்ரா வாதிடுகையில், ''எஸ்.சி ., - எஸ்.டி., சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை அதிகரித்ததன் மூலம், மாநிலத்தின் ஒட்டு மொத்த இடஒதுக்கீடு 56 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்திரா சஹானி வழக்கில் விதித்த தீர்ப்பில், மாநிலத்தின் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்குள் இரு க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
''ஆனால் இதை மீறி இடஒதுக்கீட்டை அதிகரித்து இருப்பது சரியல்ல. இந்த இடஒதுக்கீடு உயர்வு பொது பிரிவினரை பாதிக்கும்,'' என்றார்.
அரசு தரப்பு வக்கீல் ஜெகதீஷ் வாதிடுகையில், ''எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்திற்கு போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் முடிவை அரசு எடுத்தது,'' என்றார்.
அசாதாரண சூழ்நிலை
நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பில், 'இடஒதுக்கீட்டை அதிகரிக்க போதுமான தகுந்த ஆதாரங்கள் அல்லது விதிவிலக்கான அசாதாரண சூழ்நிலைகள் எதுவும் ஏற்படவில்லை.
'அரசின் இடஒதுக்கீடு, அரசியலமைப்புக்கு எதிராக உள்ளதால், அதிகரிக்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது' என்றனர்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பா.ஜ., அரசின் இடஒதுக்கீடு உயர்வு உத்தரவை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
கலப்படமான உணவு, தரமற்ற மருந்துகளுக்கு எதிரான போராட்டம் தொடரும்; துக்காராம் உறுதி
-
'கிரானைட்' வீரமணி வழக்கு: கூடுதல் டிஜிபி அருணிடம் விசாரணை
-
பெற்றோருடன் தகராறு: சிறுமியை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற கொடூர காவலாளி
-
நான்கு ஆண்டாக ‘டிமிக்கி’ கொடுத்தவர் கைது
-
ஹார்முசில் 2 கப்பல்கள் மீது தாக்குதல் 20 இந்திய மாலுமிகள் மீட்பு; 2 பேர் மாயம்
-
வறட்சியின் தாகம்: மேதவாச்சியாவின் கண்ணீர்