அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு; ஆர்பிஐ முயற்சிக்கு கிடைத்தது பலன்
மும்பை: கச்சா எண்ணெய் கொள்முதல் உள்பட பல்வேறு சர்வதேச வர்த்தகங்களுக்கு டாலரின் தேவை காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சந்தித்து வந்தது.
இதனைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியது. அதாவது, எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்கள் நேரடியாக ரிசர்வ் வங்கியிடமிருந்தே டாலர்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது தான். இதனால், பொதுச் சந்தையில் டாலருக்கான தேவை குறைக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல், ரூபாய் சார்ந்த அந்நியச் செலவாணி டெரிவேட்டிவ் (derivative) ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்ட பின் மீண்டும் முன்பதிவு செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்நியச் செலவாணி ஒப்பந்தங்களுக்கு 20% ரொக்க இருப்பு கட்டாயமாக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளால் இந்திய ரூபாயின் மதிப்பும் உயரும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தது.
அதன்படியே, வர்த்தகத் தொடக்க நாளான இன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94 பைசா உயர்ந்துள்ளது. இதன்மூலம், 96.72 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு 95.77 ஆக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில், இனி வரும் நாட்களில் இந்திய ரூபாய் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி ஒரு ரூபாய்க்கு இரண்டு டாலர் கிடைக்குமா
Oil Mktg Companies buy their required USD directly from RBI so that much huge demand reduced from regular ForEx mkt. As a consequence ForEx reserve will be reduced to that extent.
Good move by RBI. Value of INR should improve further. USD value should come down in the broad interest of the health of the world economy. Poor countries are affected a lot.மேலும்
-
ஜந்தர் மந்தரில் போராட இனி அனுமதியில்லை; மாற்று இடங்களை அறிவித்தது உள்துறை அமைச்சகம்
-
கவர்னர் அதிகாரம் திமுகவுக்கு இப்போது மட்டும் தெரியுதா? மகேஷூக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
-
மகாராஷ்டிராவில் 50 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: பழ மரங்களை காப்பாற்ற விவசாயிகள் பகீரத முயற்சி
-
பிரதமர் வருகையின் போது மரபை கடைபிடித்துள்ளார் முதல்வர் விஜய்; நயினார் நாகேந்திரன்
-
2100க்குள் மனித இனமே அழிந்து விடும்; லான்செட் ஆய்வறிக்கையில் பகீர்
-
எதிர்க்கட்சிகளின் செயல் சுத்த முட்டாள் தனம்; ஹரீஷ் சால்வே காட்டம்