2100க்குள் மனித இனமே அழிந்து விடும்; லான்செட் ஆய்வறிக்கையில் பகீர்
பெர்லின்: ஜெர்மனியின் பெர்லினில் நடந்த உலக சுகாதார உச்சிமாநாட்டில், 35 நிபுணர்கள் அடங்கிய குழுவால் தயாரிக்கப்பட்ட 'தி லான்செட்' ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், ஏஐ தொழில்நுட்பம், அணு ஆயுதப் போர், பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு, நுண்ணுயிர் எதிர்ப்பு திறன், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு உள்பட 17 முக்கிய அச்சுறுத்தல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றால், மனித இனம் 2,100ம் ஆண்டுக்குள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அணுஆயுதப் போர் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் புகையினால் வளிமண்டலம் பெரிதும் பாதிக்கப்படும். இதன் காரணமாக, சூரிய ஒளி தடுக்கப்பட்டு, உலகளாவிய வெப்பநிலை குறையும். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு, உலகளவில் பேரழிவை ஏற்படுத்தும் பெரும் பஞ்சத்திற்கு வழிவகுக்கும்.
செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சி மனித குலத்திற்கே எதிரானதாக மாறும். உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதில் ஏஐ தவறாகப் பயன்படுத்தப்படலாம். இது உலகளாவிய பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனக் கூறப்பட்டுள்ளது.
லான்செட் கமிஷனின் இணைத் தலைவர் கிறிஸ்டோபர் முர்ரே கூறியதாவது; தற்போதைய இந்த போக்கை தடுக்காவிட்டால், 2100க்குள் மனிதர்களின் வாழும் காலம் குறையும். மக்களை அச்சுறுத்துவதற்காக அல்லாமல், உலக தலைவர்கள் உரிய நேரத்தில் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவ தொழில்நுட்ப முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் மட்டுமே இந்த பேரழிவுகளைத் தடுக்க முடியும், இவ்வாறு கூறினார்.
நமக்கு ஓகே 2047 லே வல்லரசாயிடுவோம்
லான்செட் கமிஷனின் இணைத் தலைவர் கிறிஸ்டோபர் முர்ரே கூறியதாவது தற்போதைய இந்த போக்கை தடுக்காவிட்டால், 2100க்குள் மனிதர்களின் வாழும் காலம் குறையும். மக்களை அச்சுறுத்துவதற்காக அல்லாமல், உலக தலைவர்கள் உரிய நேரத்தில் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவ தொழில்நுட்ப முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் மட்டுமே இந்த பேரழிவுகளைத் தடுக்க முடியும், இவ்வாறு கூறினார். அறிஞர்கள், விஞ்ஞானிகள், அதிமேதாவிகள் இவர்கள் எல்லாம் கூறுவதெல்லாம் பொய். அதை நம்ப வேண்டாம். இந்த உலகமும் அழியும் என்று சொல்கிறார்கள். அதற்கு காரணம் இந்த விஞ்ஞானிகளும், வல்லுனர்களும் இவர்களுடைய கண்டுபிடிப்பால் தான் இந்த உலகம் இப்படி நாசமா போனது. அதேபோல் இந்த உலகம் அழிந்தாலும் அது மீண்டு வரும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் தருகிறேன். இந்த திருக்குறளும், கம்பராமாயணமும் இருந்தால் போதும் மீண்டும் இந்த உலகம் வந்துவிடும் முழுமையாக. அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ..நன்று
அந்த அறிக்கையில், ஏஐ தொழில்நுட்பம், அணு ஆயுதப் போர், பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு, நுண்ணுயிர் எதிர்ப்பு திறன், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு உள்பட 17 முக்கிய அச்சுறுத்தல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றால், மனித இனம் 2,100ம் ஆண்டுக்குள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது இது ரொம்ப நல்ல விஷயம் ஆச்சே. 2100 குள்ள மனித இனமே அழிந்து போகுது என்றால் சந்தோஷப்பட வேண்டிய விஷயம். காரணம், அவ்வளவு அநியாய அட்டூழியங்கள் தாங்க முடியல. ஒருத்தன் பட்டினியா கிடக்கிறான், இன்னொருத்தன் கோடிக்கணக்குல காசு வச்சிருக்கான். இந்த நிலைமை மாற வேண்டும் என்றால் 2100 இல் மனித இனம் அழிந்து விட்டால் நல்லது. அதைப்பற்றி ஒரு பெரிய குறிப்பு கொடுப்போம்....நன்று
உலகில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வறுமை மற்றும் பல்வேறு சவால்களைப் பார்க்கும்போது ஏற்படுகிற ஏமாற்றமும் கோபமும் இயல்பானவையே. சமூகத்தில் உள்ள அநீதிகளைக் கண்டு மனம் வருந்துவது மனிதநேயத்தின் வெளிப்பாடுதான்.
அதேசமயம், உலகளாவிய அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொள்ளும் போது, மனிதகுலத்தின் எதிர்காலம் பற்றிய இத்தகைய தீவிரமான முடிவுகளை விட, தற்போதைய பிரச்சனைகளுக்கு நடைமுறை ரீதியான தீர்வுகளைக் கண்டறிவது குறித்தும், சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்தும் சிந்திப்பது முக்கியமானது. வரலாறு முழுவதும் மனித இனம் பல கடுமையான நெருக்கடிகளையும் பேரழிவுகளையும் எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டு வந்த வரலாறும் உண்டு.
பருவநிலை மாற்றம், வறுமை மற்றும் சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகளும் தனிநபர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தில் சிறிய அளவில் மாற்றங்களை உருவாக்கவும், நல்வாழ்வை மேம்படுத்தவும் நாம் என்ன செய்ய முடியும் என்பது குறித்து சிந்திப்பது எப்போதும் பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும்...நன்று
இந்த மாதிரி ஆய்வறிக்கைகள் முழுக்க முழுக்க சில கம்பியூட்டர் மாடல்களில் சில தகவல்களை போட்டு பெறும் முடிவுகள். இவர்கள் கூற்று கொஞ்சமாவது உண்மை என்றால் மாலத்தீவு 30 ஆண்டுகளுக்கு முன்பே கடலில் மூழ்கியிருக்கும், உலகம் பல தடவை அழிந்திருக்கும். சூரிய மேற்பரப்பில் உண்டாகும் மாற்றங்களால் பூமி அழியலாம் என்றால் அதில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. இந்த அழிவிற்கு மனிதன் காரணம் என நினைத்தால் அது இயற்கையை சிறுமைப்படுத்தியது ஆகிவிடும்.
எனினும், 2100-ம் ஆண்டுக்குள் மனிதகுலம் அழிந்துவிடும் என்று இந்த ஆய்வறிக்கை உறுதியாகக் கூறவில்லை.??????????
ஏற்கனவே கொரோனா பயோ-யுத்தம்தான், அது போக பல பல புதிய நோய்கள் செயற்கையாக பரப்பப்பட்டு வருகின்றன. அதுபோக போர்கள் மற்றும் தீவிரவாதம் நின்ற பாடில்லை. ஒவ்வொரு நாட்டுத்தலைவரும் - குறிப்பாக டிரம்ப், தான் தோன்றி தனமாக செயல்பட்டுக்கொண்டு இருப்பதை பார்க்கும்போது இவர்களே உலகத்தின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருப்பார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. லான்செட் அறிக்கை ஒரு எச்சரிக்கைதானே தவிர, கட்டாயம் அப்படித்தான் நடக்கும் என அவர்கள் சொல்லவில்லை. எல்லா நாடுகளிலும், ஒவ்வொருவரும் தனது தலைமையை சரியாக தேர்ந்தெடுத்தால் மட்டுமே சரியானது நடக்கும் இனி.
have read the entire report. The committee identifies 15 major catastrophic threats to humanity, including climate change, smoking, excessive alcohol consumption, poor mental health, and malnutrition. It also examines serious risks associated with nuclear weapons and the malicious use of artificial intelligence.
However, the report appears to fall short in addressing several critical geopolitical and economic challenges that threaten global stability. Ongoing wars, terrorism, geopolitical rivalries, and disruptions to global supply chains can have far-reaching consequences for food security, energy supplies, economic stability, and public health.
Although the committee recommends that governments prioritise healthcare, its recommendations appear insufficiently comprehensive when considered against the wider range of threats facing humanity. Healthcare is undoubtedly essential, but it cannot independently resolve the underlying causes of armed conflict, international insecurity, economic disruption, or the breakdown of global cooperation.
இன்னும் 10 வருடங்களில் , மனிதன் பணம் பயிரிட்டு அறுவடை செய்ய வேண்டும் என்று போராடுகிறான்.நீங்க காமெடி பண்றீங்க
ம் -ம் -ம் -ம் -ம் -ம் வந்துடாய்ங்கப்பா இந்த அழகிப் போட்டில மாரியம்மன் கோவில் விளக்கு மாவு மாதிரி நாக்காலிகளில குச்சுக்கிட்டு ஜொள்ளு ஒளுக்கர கெளவாடி விங்கானிக கொரொனா பகவானுக்கும் பெறகு ரண்டு வருசமாப் பொத்திக்கிட்டுக் கெடந்தானுக இத்தாலிக் களவாணி சோரோசும் ஓடாத ராக்கெட்டுக் களவாணி மச்சுக்கும் சேந்து பணம் குடுத்து ஒரு அறிக்கய உட்ருக்கானுங்க
"அணு ஆயுதப்போர் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் புகையினால் - - - - " அடேய் அடேய் அடேடேய் கொஞ்சம் அளவ்வ்வ்வாப் புளுகுங்கடா கெளவாடிகளா இப்ப நீங்கெல்லாம் அடிச்சுக் குவிச்சிரிக்கர 12,187 அணுகுண்டுகளும் வெடிச்சு வச்சாக்கா, வெடிச்சதுக்கு அப்பரமேட்டிக்கித்தான் அழிவு துவங்குது அப்பர மேட்டிக்கி அங்க என்னதாண்டா மிஞ்சி இருக்கப் போகுது? சொல்லரதுக்கு நீயும் இருக்க மாட்டே கேட்டுக்கரதுக்கு நாங்களும் இருக்க மாட்டம் மொதல் குண்டு வெடிச்சதுமே பாதி பூமி போண்டா அடுத்தது வந்த மீதியும் போண்டா மிச்சம் இருக்கர 17,185 வேலயெ இல்லெ அதுக வெடிச்சா ஆருக்கென்ன வெடிக்காட்டி ஆருகென்ன? அட போங்கடா கார்கள முதலில நிருத்தித் தொலைங்கடா எண்ணெயெ எரிக்காம் இருங்கடா