தி.மு.க.,வில் நிர்வாக மறுசீரமைப்பு: மாவட்ட செயற்குழுவில் முடிவு
செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் கட்சி நிர்வாக வசதிக்காக ஒன்றியங்கள் மற்றும் நகர்ப்புறத்தை மறுசீரமைப்பு செய்ய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் சட்டசபை தொகுதி அவசர செயற்குழு கூட்டம் செஞ்சியில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் ரவிக்குமார், அருணகிரி, அமுதா ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மஸ்தான்,
தலைமை பிரதிநிதிகள் புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா, மாநில மாணவரணி செயலாளர் வீரமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.
இதில் செஞ்சி, மேல்மலையனுார், மரக்காணம் ஒன்றியங்களை நிர்வாக வசதிக்காக, 4 ஆகப் பிரிக்கவும்,
திண்டிவனம் நகராட்சியில் உள்ள, 33 வார்டுகளை நிர்வாக வசதிக்காக திண்டிவனம் வடக்கு, திண்டிவனம் மேற்கு என இரண்டாக பிரிக்கவும் தீர்மானம் நிறைவேற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், செயற்குழு உறுப்பினர் நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், வீடூர் ரவி, சாந்தி ஏழுமலை, பாலகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணி நிர்வாகிகள், தொ.மு.ச., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.
மேலும்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
-
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருடிய 5 பேர் கைது
-
கலெக்டர் உத்தரவில் டாக்டர் 'சஸ்பெண்ட்'