ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் மன அழுத்தம் பயிலரங்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வணிக மேலாண்மை துறை சார்பில் மன அழுத்தம் குறித்த ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் அசோக் முன்னிலை வகித்தார். புல முதல்வர்கள் சக்திவேல், லோரா வாழ்த்திப் பேசினார். உதவி பேராசிரியை சுகன்யா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக தந்தை ஹான்ஸ் ரோவர் கல்லுாரி வணிகவியல் துறை பேராசிரியர் தேவி பங்கேற்று, மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள், அதை எவ்வாறு கையாள வேண்டும். இளம் வயதில் மன உளைச்சல், சோர்வு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஒழுக்கத்துடன் கல்வி கற்பது, தொழில் முனைவோராக உருவாகுதல் குறித்து பேசினார்.

பயிரலங்கில் மாணவ, மாணவிகள், உதவி பேராசிரியர்கள் பங்கேற்றனர். வணிக மேலாண்மை துறை உதவி பேராசிரியை தீனா நன்றி கூறினார்.

Advertisement