பால்குடம் ஊர்வலம்

கமுதி: கமுதி அருகே நத்தம் ஊராட்சி அண்ணா நகர் குடியிருப்பில் உள்ள அழகுமீனாள் அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டு, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் அழகுமீனாள் அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.

காப்பு கட்டிய பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கரகம், அக்கினி சட்டி, பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். பின் அழகுமீனாள் அம்மனுக்கு பாலபிஷேகம், தீபாராதனை நடந்தது. மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி உள்ளிட்ட பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.

Advertisement