தேசிய ஹாக்கி போட்டி: பள்ளி மாணவி தேர்வு

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி விஜயமாலினி 17 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான எஸ்.ஜி.எப்., ஹாக்கி தேர்வு புதுக்கோட்டையில் நடந்ததில் தேர்வு செய்யப்பட்டார். தேசிய ஹாக்கி போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்கிறார்.

டிச., மாதம் ஒடிசா மாநிலத்தில் நடக்கும் தேசிய போட்டிக்கு செல்ல உள்ளார். அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியை தலைமை ஆசிரியர் வேணிரத்தினம், உதவி தலைமை ஆசிரியர் நிவேதிதா மற்றும் ஆசிரியர் ராஜ்குமார், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement