மாவட்ட தடகளப் போட்டி கோலாலகமான துவக்கம்!
திருப்பூர்: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை மற்றும் காங்கயம் ஆகிய, 7 குறுமையங்களில் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், முதல் இரு இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கான, திருப்பூர் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள், திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் துவங்கியது.
திருப்பூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரகுகுமார், தேசியக் கொடியேற்றி, போட்டிகளை தொடங்கி வைத்தார். கண்காணிப்புக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒலிம்பிக் கொடி; உடற்கல்வி இயக்குநர் முருகேஸ்வரி, மாவட்ட கழகக் கொடியை ஏற்றினர்.
நேற்றைய போட்டியில், 354 மாணவர்கள், 313 மாணவியர் என, 667 பேர் களமிறங்கி தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். இதில், 200 மீ., 600, 800, 3000 மற்றும், 400 மீ., தொடர் ஓட்டம்; 80 மீ, 100 மீ, 110 மீ., தடை தாண்டும் ஓட்டம்; குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டன.
‘ஹை-டெக் ரிசல்ட்’––––––––––––––––––––
ஏறத்தாழ, 60 நடுவர்கள் போட்டிகளை வழி நடத்தினர். வெற்றியாளர்களை துல்லியமாக கணிக்க, நவீன ‘போட்டோ பினிஷ்’ மற்றும் இ.டி.எம்., எனப்படும் ‘எலக்ட்ரானிக் டிஸ்டன்ஸ் மெஷர்மென்ட்’ கருவிகள் பயன்படுத்தப்பட்டு, முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டன. இன்று, (14ம் தேதி) காலை, எஞ்சிய போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து, மாலை நடைபெறும் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, -மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
-
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருடிய 5 பேர் கைது
-
கலெக்டர் உத்தரவில் டாக்டர் 'சஸ்பெண்ட்'