தாலிக்கொடி பறித்தவர் 2 ஆண்டு கம்பி எண்ணனும்!
திருப்பூர்: கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய பெண்ணின் கழுத்திலிருந்த தாலிக்கொடியைப் பறித்துச் சென்ற நபருக்கு திருப்பூர் கோர்ட்டில் இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூர், மருதாசலபுரத்தைச் சேர்ந்தவர் கல்பனா, 37. கடந்த 2017ல், அருகிலுள்ள கோவிலுக்கு சுவாமி கும்பிட்டு விட்டு, தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அவ்வழியாக பைக்கில் வந்த நபர் அவர் அணிந்திருந்த 10 சவரன் தாலிக்கொடியைப் பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, இதில் ஈடுபட்ட ஜெகதீஷ், 37 என்பவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண்: 1 மாஜிஸ்திரேட் செந்தில்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் உதவி அரசு வக்கீல் ேஹமா மகேஸ்வரி ஆஜரானார். இதில், ஜெகதீசுக்கு, 2 ஆண்டு சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அவர் மற்றொரு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளதால், இந்த தண்டனையை அத்துடன் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
மேலும்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
-
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருடிய 5 பேர் கைது
-
கலெக்டர் உத்தரவில் டாக்டர் 'சஸ்பெண்ட்'