பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி

பாட்னா: பீஹாரின் ஹாஜிபூர் மாவட்டத்தில் கங்கை ஆறு ஓடுகிறது. இங்கு துக்க நிகழ்வில் கலந்து கொண்டு சிலர் படகு வாயிலாக சொந்த ஊருக்கு திரும்பினர்.

அதில் 15 முதல் 20 பேர் வரை பயணித்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. பெரும்பாலனோர் சிறுவர்கள்.

ஆற்றின் மையப்பகுதியில் படகு திடீரென கவிழ்ந்தது. அனைவரும் ஆற்றுக்குள் மூழ்கினர். இதில் 10 பேர் உயிரிழந்த நிலையில் மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

போலீசார், மாநில பேரிடர் மீட்புப்படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். மீட்புப்பணிகளை மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது.

Advertisement