மின்வெட்டு ஏற்படுவது உண்மையா? தமிழக அரசு ரகசிய கண்காணிப்பு

தமிழகத்தில் பூதாகரமாக மாறியுள்ள மின் வெட்டு எப்படி ஏற்படுகிறது என்பதை உண்மை நிலையை கண்டறிய அரசு தொகுதிக்கு 2 த.வெ.க., தொழிற்சங்க பணியாளர்களை நியமித்துள்ளது.தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்கிற நோக்கத்தில் த.வெ.க., வை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆட்சி அமைக்கப்பட்ட பின் தமிழக்தில் வரலாறு காணாத மின்வெட்டு உள்ளது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே சொல்லப்படுகிறதா அல்லது உண்மையில் ஏதேனும் மின்வெட்டு உள்ளதா என்கிற குழப்ப நிலையில் அரசு உள்ளது.

இதற்காக வெளி மாநிலத்தில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு வாங்குகிறது. இருப்பினும் மின்வாரியத்தில் தொ.மு.ச., வில் அதிருப்தியாளர்களை குறிவைத்து த.வெ.க., பக்கம் இழுத்து வருகிறது. அவ்வாறு வந்துள்ள தொழிலாளர்களை வைத்து தொகுதிக்கு 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பணி எங்கே மின்வெட்டு ஏற்படுகிறது. அதற்கு காரணம் என்ன. எவ்வளவு நேரம் மின் வெட்டு உள்ளது. அதை எப்போது ஊழியர்கள் சரி செய்தார்கள். இதனால் யார் யாருக்கு பாதிப்பு உள்ளது போன்ற விவரங்களை சேகரித்து கட்சித் தலைமை மற்றும் மின்வாரிய அமைச்சருக்கும் அனுப்பி வருகின்றனர்.

Advertisement