விவசாயிகள் மறியல்
ஆயக்குடி: பழநி அருகே ஆயக்குடியில் மாப்பிள்ளைநாயக்கன் குளத்தில் இருந்து கோம்பைபட்டி செல்லும் ரோட்டில் தனிநபர்கள் தென்னை மரங்களை நட்டு பாதையை மறித்துள்ளனர். எனவே நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் வருவாய் துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்பேரில் நேற்று அளவீடு செய்ததை தனிநபர்கள் தடுத்ததால் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக் குழு உறுப்பினர் கமலக்கண்ணன் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் திண்டுக்கல் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயக்குடி போலீசார் சமரசம் செய்தனர். தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் நில அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
-
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருடிய 5 பேர் கைது
-
கலெக்டர் உத்தரவில் டாக்டர் 'சஸ்பெண்ட்'
Advertisement
Advertisement