தேர்தல் அதிகாரி பதவி விலகக்கோரிகடலுாரில் இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம்

கடலுார்: தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலகவும், டில்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மத்திய மாவட்ட இளைஞர் காங்., சார்பில் கடலுார் அம்பேத்கர் சிலை அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்., மாவட்டத் தலைவர் அருள் பிரகாஷ் தலைமை தாங்கினார். கடலுார் தொகுதி தலைவர் தர்மதுரை, ஒன்றிய தலைவர்கள் ராஜேஷ், அசோக் பிரவீன், மாவட்டத் துணைத் தலைவர் ராமராஜ் முன்னிலை வகித்தனர்.

காங்., மாநில செயலாளர் சந்திரசேகரன், இளைஞர் காங்., மாநிலத் துணைத் தலைவர் பர்வீனா பானு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாநகர தலைவர் வேலுசாமி, மீனவர் காங்., தலைவர் கார்த்திகேயன், இளைஞர் காங்., முன்னாள் மாவட்ட தலைவர் கலையரசன்,நெல்லிக்குப்பம் நகரத் தலைவர் ரவிக்குமார், தொரப்பாடி நகர தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், ராஜேஷ், காமராஜ், ராஜ்குமார், கிஷோர் குமார உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement