பி.டி.ஓ., அலுவலகம் முன் மறியல்: அரசு பணியாளர் சங்கத்தினர் கைது
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் 105 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா மேப்புலியூரில் பணிபுரிந்த டேங்க் ஆப்ரேட்டர் சிவகொழுந்து மற்றும் செம்மனந்தல் ஊராட்சியில் பணிபுரிந்த துாய்மைக் காவலர் தனலட்சுமி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களை மீண்டும் பணியில் சேர்க்க கோரி ஊராட்சி நிர்வாகத்திற்கு பி.டி.ஓ., அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் மீண்டும் பணி வழங்காததால் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் நேற்று திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 105 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
Advertisement
Advertisement