டாக்டர்கள் ஓய்வூதியம் குறைப்பு அரசாணை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: அரசு டாக்டர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தை குறைக்கும் அரசாணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி ரத்து செய்ததை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. அரசு டாக்டர்களாக பணிபுரிந்து 2009 க்கு முன் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்தை குறைத்து 2025 ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதற்கு எதிராக ஒய்வூதியம் பெறும் சில டாக்டர்கள் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். அரசாணையை தனி நீதிபதி ரத்து செய்தார். இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்கினால், அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.300 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர்களின் ஓய்வூதியத்தை பறிப்பதற்கு நிதிச்சுமையை காரணமாக காட்ட முடியாது. அரசு பணியில் டாக்டர்கள் ஆற்றிய சேவை, அவர்கள் முதுமையில் எதிர்கொள்ளும் நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும். ஓய்வூதியத்தை குறைப்பதற்கு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. அரசாணையை மட்டும் ஆதாரமாக கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை பறிக்க முடியாது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
மேலும்
-
ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியில் வாழ்க்கையில் வெல்லும் கல்வி முன்னெடுப்பு
-
தொங்கும் மின் பெட்டி: துாங்கும் நகராட்சி?
-
குறுமைய போட்டிகளில் ஸ்ரீசாய் பள்ளி அசத்தல்
-
8 மாத உழைப்பு வீணானது: மபி நதியை தனி ஆளாக சுத்தம் செய்த இளைஞர் வேதனை
-
23 நாட்களாக தண்ணீர் வரல... கடுப்பான இடுவாய் மக்கள் சாலை மறியல் செய்து ஆவேசம்
-
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவித்தொகை விண்ணப்பித்தும் லேட்டாவதாக புகார்