மில்க் ஸ்வீட்டுக்கு 3 நாள்; காரத்துக்கு 15 நாள்! கெடு நிர்ணயித்தது உணவு பாதுகாப்புத்துறை
கோவை: நவராத்திரி துவங்கியுள்ளதால், பூஜைக்காக இனிப்பு தயாரிக்க முடியாதவர்கள் கடைகளில் வாங்குவர். தொடர்ந்து தீபாவளி பண்டிகை நவ., 8ல் கொண்டாடப்படுகிறது.
பண்டிகை கால இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு நடத்த உணவு பாதுகாப்பு துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
கோவையில், வழக்கமாக 25 நிறுவனங்கள் தங்களின் கடைகளுக்காக பிரத்யேக பேக்டரியில் இனிப்பு தயாரிக்கின்றன. இதுதவிர, கேட்டரிங் நிறுவனங்கள் மண்டபங்களை வாடகைக்கு எடுத்து இனிப்பு, காரங்களை மொத்தமாக தயாரித்து விற்பது வழக்கம்.
இதில், எந்தெந்த உணவுகளை எவ்வளவு நாட்களுக்குள் தயாரித்து வழங்க வேண்டுமென, உணவு பாதுகாப்பு துறை விதிமுறைகளை வழங்கியுள்ளது.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ‘‘பால், பால் பொருட்களில் செய்த இனிப்புகள் மூன்று நாட்கள் வரை மட்டுமே கெட்டு போகாமல் இருக்கும். எண்ணெயில் தயாரிக்கும் இனிப்புகளையும் 7–10 நாட்களுக்குள் சாப்பிட வேண்டும். கார வகைகளை 15 நாட்கள் வரை சாப்பிடலாம்.
சில்லறை விற்பனையில் ஈடுபட்டாலும், இனிப்பு வைத்திருக்கும் டிரேயில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிட வேண்டும். இதுசார்ந்த புகார்களை பொதுமக்கள், 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது unavupukar@gmail.com என்ற இ–மெயில் முகவரியிலோ தெரிவிக்கலாம்,’’ என்றார்.
மேலும்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
-
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருடிய 5 பேர் கைது
-
கலெக்டர் உத்தரவில் டாக்டர் 'சஸ்பெண்ட்'