சமூக வலைதளங்களில் மதுபான விளம்பரம்: 2 மதுபான கடைகளுக்கு சீல் வைப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் சமூக வலைதளங்கள் மூலம் மதுபானங்களை விளம்பரம் செய்த 2 மதுபான கடைகளுக்கு கலால்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
புதுச்சேரி கலால் விதிகளின்படி, உரிமம் பெற்றவர்கள் தங்களது சொந்த இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்கள் மூலம் குறிப்பிட்ட பிராண்டு மதுபானங்களையும், தங்கள் உரிமம் பெற்ற இடத்தையும் விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சமீப காலமாக, இந்த விதிகளை மீறி சில மதுபான கடைகள் விளம்பரத்தில் ஈடுபடுவது கலால்துறைக்கு தெரியவந்தது.
இதையடுத்து, கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின்பேரில், தாசில்தார் ராஜேஷ் கண்ணா மேற்பார்வையில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கலால் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
அதில், கருவடிக்குப்பத்தில் இயங்கிவரும் ஒரு மதுபான கடை மற்றும் நெல்லித்தோப்பு, திருவள்ளுவர் சாலையில் உள்ள ரெஸ்டோ பார், கலால் விதிகளை மீறி சமூக வலைதளங்களில் ஒரு பீர் வாங்கினால் மற்றொரு பீர் இலவசம், மூன்று பீர் வாங்கினால் உணவு இலவசம் என வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விளம்பரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மதுபான கடை மற்றும் ரெஸ்டோ பார் சீல் வைக்கப்பட்டது.
மேலும்
-
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்