அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் சீராபாலா. அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். இவர் மீது த.வெ.க., நிர்வாகி முத்து, ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதில் சீராபாலா சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில், ‘தாராபுரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்றதுடன், அமைச்சர் செங்கோட்டையன் மீது அவதுாறான வாசகங்களை குறிப்பிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் சீராபாலாவை கைது செய்த போலீசார் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement