பட்டாசுகள் கையாள்வதில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை
திண்டுக்கல்: ‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் இடங்கள், விற்பனை செய்யும் இடங்கள், சேமித்து வைக்கும் இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியிருந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கலெக்டர் துர்கா எச்சரித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
பட்டாசுகளுக்கு மிக அருகில் மின் விளக்குகளை பொருத்தி எரிய செய்யக்கூடாது. பட்டாசு பண்டல்களை தரையில் இழுத்து கையாளக்கூடாது. பண்டல்களை மேலிருந்து கீழே போட்டு இறக்கக்கூடாது. கைகளினால் மட்டுமே கையாள வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். பட்டாசு கடைகளில் மெழுகுவர்த்தி, விளக்கு, தீபம் பயன்படுத்தக் கூடாது. பட்டாசுகளை மறுமுறை பார்சல் செய்யக்கூடாது. மழைக்காலம் என்பதால் இடி, மின்னல் ஏற்படும் என்பதை கவனத்தில் கொண்டு பட்டாசுகளை கையாள வேண்டும்.
அதேபோல் வீடுகளில் பட்டாசு வாங்கி வைத்திருக்கும் போது அவற்றிற்கு அருகில் எரியும் தீபம், விளக்கு, ஊதுபத்தி ஆகியவற்றை எடுத்துச் செல்லக்கூடாது. சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வீட்டில் வைத்து விற்பனைக்காக பார்சல் செய்யக்கூடாது. அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
இவ்விதிமுறைகளை மீறும் உற்பத்தி நிறுவனங்கள், விற்பனை நிறுவனங்கள், பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும்
-
ஆடு மேய்க்கும் தொழிலாளி வீட்டிற்கு ரூ. 10 ஆயிரத்து 938 மின் கட்டணம்: 20 நாட்களாக இருளில் வசிக்கும் குடும்பம்
-
மின்வாரியத்தினர் ஆர்ப்பாட்டம்
-
வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை
-
தாலிக்கொடி பறித்தவர் 2 ஆண்டு கம்பி எண்ணனும்!
-
மாவட்ட தடகளப் போட்டி கோலாலகமான துவக்கம்!
-
ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியில் வாழ்க்கையில் வெல்லும் கல்வி முன்னெடுப்பு