தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கட்டுமான பொருட்கள் சப்ளை: கேரள முதல்வர் சதீசன் தகவல்
திருவனந்தபுரம்: ‘கேரளாவில் கட்டுமானப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில், இம்மாத இறுதிக்குள் தமிழகத்தில் இருந்து வந்து சேரும்’ என, அம்மாநில முதல்வர் சதீசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கேரளாவில் காங்கிரசை சேர்ந்த முதல்வர் சதீசன் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் கட்டுமானப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. அம்மாநில சட்டசபையில் இந்த விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு முதல்வர் சுதீசன் அளித்த பதில்:
இதற்கு முன், 400 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு 5 லட்சம் ரூபாய் மட்டுமே செலவானது. ஆனால், கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்ததால், தற்போது 8 லட்சமாக அதிகரித்துள்ளது. எனவே, தமிழகத்திடம் இருந்து கூடுதல் குவாரிப் பொருட்களை வாங்க முயற்சி எடுத்துள்ளோம். இதற்காக தமிழக முதல்வரிடம் நேரடியாக பேசினேன். அவரும் இம்மாத இறுதிக்குள் கட்டுமானப் பொருட்களை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார். இதனால், கட்டுமானப் பொருட்களின் விலை மீண்டும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஆடு மேய்க்கும் தொழிலாளி வீட்டிற்கு ரூ. 10 ஆயிரத்து 938 மின் கட்டணம்: 20 நாட்களாக இருளில் வசிக்கும் குடும்பம்
-
மின்வாரியத்தினர் ஆர்ப்பாட்டம்
-
வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை
-
தாலிக்கொடி பறித்தவர் 2 ஆண்டு கம்பி எண்ணனும்!
-
மாவட்ட தடகளப் போட்டி கோலாலகமான துவக்கம்!
-
ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியில் வாழ்க்கையில் வெல்லும் கல்வி முன்னெடுப்பு