மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2ம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த ஊரக, நகர்ப்புற, மாநகராட்சி பொறுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் இணை இயக்குநர் ஜெகதீசன் தலைமை வகித்து பயிற்சி அளித்தார். 22 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், 10 தாசில்தார்கள், கூடுதல் பொறுப்பு அலுவலர்களான துணை தாசில்தார்கள், நகராட்சி கமிஷனர்கள், 3 மாநகராட்சி மண்டல பொறுப்பு அலுவலர்கள் உட்பட 60 பேர் பயிற்சியில் பங்கேற்றனர்.
இணை இயக்குனர் பயிற்சி அளித்து பேசுகையில், ‘40 வினாக்களுக்கும் பதிலை பெற்று துல்லியமாகவும், வரைபடம் சமர்பித்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை சேகரிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு சேகரிக்கப்படும் தரவுகள் என்பதால் எவ்வித சமரசமும் இன்றி விபரங்களை சேகரித்து பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்’ என்றார். மேலும் அலுவலர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
மேலும்
-
ஆடு மேய்க்கும் தொழிலாளி வீட்டிற்கு ரூ. 10 ஆயிரத்து 938 மின் கட்டணம்: 20 நாட்களாக இருளில் வசிக்கும் குடும்பம்
-
மின்வாரியத்தினர் ஆர்ப்பாட்டம்
-
வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை
-
தாலிக்கொடி பறித்தவர் 2 ஆண்டு கம்பி எண்ணனும்!
-
மாவட்ட தடகளப் போட்டி கோலாலகமான துவக்கம்!
-
ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியில் வாழ்க்கையில் வெல்லும் கல்வி முன்னெடுப்பு