ஊத்துக்குளி கொங்கு பள்ளி நாட்டு நலப்பணி முகாம்

திருப்பூர்: ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், மாணவர்கள், மாணவிகள் பிரிவுகளுக்கு அக்.1 முதல் 7-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது. செங்கப்பள்ளி அழகு நாச்சியம்மன், தாலிகட்டிபாளையம் காமாட்சியம்மன் கோவில் வளாகங்களில் நடந்த முகாமில் தூய்மைப்பணி, பனை விதை நடுதல், மருத்துவ முகாம், போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடக்க விழாவுக்கு பள்ளித் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். செயலாளர் செந்தில்நாதன், தாளாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் சந்திரசேகர், துணைத் தலைவர்கள் கருப்புசாமி, பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். நிறைவு விழாவில் நிர்வாகக்குழு உறுப்பினர் கீதாராணி மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கினார். ஏற்பாடுகளைத் திட்ட அலுவலர்கள் சந்திரசேகர், பிரியதர்ஷினி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட முகாமில் பங்கேற்றோர்.

Advertisement