குருத்வாராவில் குழப்பம் விளைவிக்க முயற்சி: கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிந்தது டில்லி போலீஸ்
புதுடில்லி: டில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக கமிட்டி தலைவர் ஹர்மீத் சிங் கல்கா, டில்லி போலீஸில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், குருத்வாராவில் ஆம் ஆத்மி கட்சியினர் குழப்பத்தில் ஈடுபட்டனர். தவறாக வழிநடத்தும் வகையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர் எனக்குறிப்பிட்டு இருந்தார். அது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்தார்.
இதனையடுத்து அக்கட்சி தலைவர் கெஜ்ரிவால், எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஹர்மீத் சிங் கல்கா நிருபர்களிடம் கூறுகையில், குருத்வாரா அருகே ஆம்ஆத்மியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீக்கிய சமூகத்தினர் இடையே அதிருப்தி நிலவுகிறது. கெஜ்ரிவால் மீது போலீசில் புகார் அளித்தேன்.
அக்கட்சி தொண்டர்கள் சிலர், குருத்வாராவுக்குள் நுழைந்து பதாகைகளையும், போஸ்டர்களை காட்டி கோஷங்களை எழுப்பினர். அவர்களின் செயல் மதத்தின் புனிதத்திற்கு எதிரானவை. குருத்வாராவிற்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும் என போலீசிடமும் கோரிக்கை வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
சீக்கியரிடம் வம்பு வைக்காதவரை அவர்கள் அமைதியாக இருப்பார்கள். கேஜ்ரிவால் வம்பு இழுத்துவிட்டார். இனிமே சீக்கியர்கள் சும்ம இருக்க மாட்டார்கள். விரவில் கெஜ்ரிவில் மன்னிப்புக் கேட்டு விட்டு ஓடி ஒளிவார்
அரசியல் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்கும் போது அவர்கள் ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்க நீதிமன்றம் தீர்வு காண முடியும். ராகுல், கெஜ்ரிவால், கனிமொழி, ராஜா, மம்தா எவ்வளவு ஆபத்தானவர்கள் என்று நாடு அறியும். இவர்கள் பல குற்றவாளிகளை உருவாக்கி வருகின்றனர். வழக்கு விசாரணை பலன் தராது.மேலும்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
-
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருடிய 5 பேர் கைது
-
கலெக்டர் உத்தரவில் டாக்டர் 'சஸ்பெண்ட்'