மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே வெல்டிங் மிஷினில் வேலை செய்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்.
சத்திரக்குடி அருகே அரியகுடி புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் பழனிச்சாமி 28. மனைவி வினிதா. திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் வீட்டில் பழனிச்சாமி வெல்டிங் மிஷின் மூலம் தகர கூரை வேலை பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. துாக்கி வீசப்பட்ட நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் இறந்ததாக தெரிவித்தனர். சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குருத்வாராவில் குழப்பம் விளைவிக்க முயற்சி: கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிந்தது டில்லி போலீஸ்
-
மேல்மலையனுார் ஊஞ்சல் உற்சவத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை தேவை
-
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல்மிக்க நகரங்கள் பட்டியலில் பெங்களூரு, புனே
-
பா.ஜ., ஆர்ப்பாட்டம்
-
ஊத்துக்குளி கொங்கு பள்ளி நாட்டு நலப்பணி முகாம்
-
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
Advertisement
Advertisement