தொங்கும் மின் பெட்டி: துாங்கும் நகராட்சி?
பல்லடம்: பல்லடத்தில், குடியிருப்பு பகுதியில் மின் மோட்டார் பெட்டி உடைந்து தொங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும், இதை சரி செய்யாமல், நகராட்சி நிர்வாகம் துாங்கிக் கொண்டுள்ளது.
பல்லடம், - செட்டிபாளையம் ரோடு, துரைசாமி நகரில், நகராட்சிக்கு உட்பட்ட மின் மோட்டார் பெட்டி ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டுள்ளது.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
மின் மோட்டார் பெட்டி உடைந்து பல நாட்கள் ஆகியும் மாற்றி அமைக்கப்படவில்லை. பெட்டி உடைந்து, இதனுடன் இணைப்பில் உள்ள மின் கம்பிகள் சாய்ந்து விழும் நிலையில் தொங்கிக் கொண்டுள்ளன. மாலை நேரங்களில், அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து, தினசரி, எண்ணற்ற குழந்தைகள் ரோட்டில் விளையாடுகின்றனர். தொங்கிக்கொண்டுள்ள மின்கம்பி எப்போது வேண்டுமானாலும் விடலாம் என்ற சூழலில், குழந்தைகளுக்கு ஆபத்து உள்ளது. தினசரி, மின்மோட்டாரை இயக்கும் நகராட்சி ஊழியர்களும் இதை கண்டு கொள்வதே இல்லை. எனவே, இவ்விஷயத்தை அலட்சியப்படுத்தாமல், மின் மோட்டார் பெட்டியை பழுது பார்த்து, சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம்
-
விவசாயிகளின் விவரங்களை துல்லியமாக பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
-
தாசில்தார், சார் பதிவாளருக்கு ‘பிடிவாரண்ட்’ திட்டக்குடி சப் கோர்ட் நீதிபதி அதிரடி
-
கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது
-
சில்லறை விற்பனை டீசல் பங்க் கோரி பழையாரில் 2 வது நாளாக போராட்டம்
-
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் போராட்டம்