ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவித்தொகை விண்ணப்பித்தும் லேட்டாவதாக புகார்
கோவை: பெற்றோர் ஆதரவு இல்லாத குழந்தைகளுக்கு விண்ணப்பித்தும், உதவித்தொகை கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
பெற்றோர் இல்லாத அல்லது பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளின் கல்வி மற்றும் பராமரிப்புக்கு உதவும் வகையில், தமிழக அரசின் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தின் கீழ் மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 463க்கு அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர்.
அதேபோல், மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ திட்டத்தின் கீழ், ஸ்பான்சர்ஷிப் நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அதிக விண்ணப்பங்கள் வருவதால், தகுதியின் அடிப்படையில் ஆண்டுக்கு 200 குழந்தைகள் வரை தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், இத்திட்டங்களின் கீழ் நிதியுதவி கோரி விண்ணப்பித்தும் உதவித்தொகை கிடைக்கவில்லை எனக் கூறி, மக்கள் குறைதீர் கூட்டங்களில் மனுக்கள் அளிக்கப்படுகின்றன.
குழந்தைகள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதை மறுக்கின்றனர். ‘திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கிறோம். அலுவலர்கள் கள ஆய்வு செய்து, ஆவணங்களை சரிபார்க்கின்றனர். அனைத்தும் சரியாக இருந்தால், பரிசீலனை செய்து அனுப்பி வைக்கிறோம்.
தகுதியுள்ள குழந்தைகளுக்கு 18 வயது முடியும்வரை மாநில அரசின் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசின் ஸ்பான்சர்ஷிப் திட்டத்துக்கும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. பள்ளிகள் வாயிலாகவும் உதவி தேவைப்படும் மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து வருகிறோம்’ என்கின்றனர் அவர்கள்.
மேலும்
-
ஆந்திரா ஸ்பெஷல் சாப்பாடு; திருப்பதியில் தரிசனம்; ஆய்வு கூட்டம் இல்லாததால் தமிழக அதிகாரிகள் ஜாலி
-
ஈரான் அதிபராக யார் விரும்புகிறீர்கள்? தேர்தல் பிரசாரத்தில் அதிபர் டிரம்ப் கேள்வி
-
துவங்குகிறது புதிய அத்தியாயம்; உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; பியூஷ் கோயல்
-
2029 ஏப்ரல் முதல் பி.எஸ்.,-7 விதிகள் அமல்: மத்திய அரசு அதிரடி
-
ரஷ்யாவுக்கு உதவுகிறது அமெரிக்கா!: உக்ரைன் குற்றச்சாட்டு
-
தசராவை முன்னிட்டு டில்லியில் உருவான 221 அடி உயர ராவணன் பொம்மை