குறுமைய போட்டிகளில் ஸ்ரீசாய் பள்ளி அசத்தல்
திருப்பூர்: வடக்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளில் ஸ்ரீசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூர், பி.என். ரோடு, ராம் நகரில் இயங்கி வரும் ஸ்ரீசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், வடக்கு குறுமைய அளவிலான போட்டிகளில் ஆண்டுதோறும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கடந்த இரு கல்வியாண்டுகளில் ஆண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில், 3வது இடமும், பெண்கள் பிரிவில் 2024–25ம் ஆண்டில் முதலிடம், 2025 – 2026ம் ஆண்டில் இரண்டாமிடமும் பெற்றுள்ளது.
நடப்பாண்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவிலும் முதலிடம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். சாதனையைப் படைத்த மாணவர்களுக்கும் ஒத்துழைப்பும் ஊக்கமும் வழங்கிய ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும்
-
மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம்
-
விவசாயிகளின் விவரங்களை துல்லியமாக பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
-
தாசில்தார், சார் பதிவாளருக்கு ‘பிடிவாரண்ட்’ திட்டக்குடி சப் கோர்ட் நீதிபதி அதிரடி
-
கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது
-
சில்லறை விற்பனை டீசல் பங்க் கோரி பழையாரில் 2 வது நாளாக போராட்டம்
-
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் போராட்டம்