காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி; ராணுவத்தின் கண்ணிவெடியில் சிக்கி பயங்கரவாதிகள் 4 பேர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை பகுதி அருகே ராணுவத்தின் கண்ணிவெடியில் சிக்கி பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப் பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் முயற்சிகளைத் தடுப்பதற்காக, பாதுகாப்புப் படையினர் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஊடுருவல் முயற்சியை தடுக்கும் வகையில் எல்லைப் பகுதிகளில் கண்ணிவெடிகளை பாதுகாப்பு படையினர் புதைத்து வைத்துள்ளனர்.
இன்று (அக்., 12) பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காட்டி (Krishna Ghati) பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தனர்.
ஊடுருவ முயன்றபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் பயங்கரவாதிகள் தற்செயலாக மிதித்ததால், நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் நான்கு பேரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கியத் தளபதியான முகமது பைசான் ஒருவன். பயங்கரவாதிகளின் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
ஹார்முசில் 2 கப்பல்கள் மீது தாக்குதல் 20 இந்திய மாலுமிகள் மீட்பு; 2 பேர் மாயம்
-
வறட்சியின் தாகம்: மேதவாச்சியாவின் கண்ணீர்
-
பில் தொகைக்காக ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலாளர் அதிரடி கைது
-
ஷாசாத் கூட்டாளிகள் பதுங்கல்: ஈரோடு, திருப்பூரில் என்ஐஏ வலை
-
கடலை மிட்டாய் 'கேக்' ஆனது எப்படி? பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் அதிர்ச்சி
-
இண்டி கூட்டணி பேரணியில் பரபரப்பு; நெருக்கிய நபரை முழங்கையால் குத்திய ராகுல்