இளம்பெண் பலாத்காரம் போலி பூசாரி கைது
சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா தாலுகாவின், மேகனஹட்லு கிராமத்தில் வசிப்பவர் சதீஷ் பாத்ரி, 50.
இதே கிராமத்தில் சிறியதாக துர்கா பரமேஸ்வரி கோவில் கட்டி, பூஜித்து வந்த இவர், தனக்கு அம்மன் அருள் இருப்பதாகவும், அதனால், தான் பேய் விரட்டுவது, மாந்த்ரீகம் செய்வதில் வல்லவர் எனவும், கூறி, மக்களை நம்ப வைத்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், ஹாசனைச் சேர்ந்த இளம்பெண்ணை, அவரின் குடும்பத்தினர், பேய் பிடித்திருப்பதாக கூறி, பூசாரி சதீஷ் பாத்ரியிடம் அழைத்து வந்தனர்.
அவர் பேய் விரட்டும் சாக்கில், இளம்பெண்ணை பிரம்பால் அடித்து, உயிருள்ள கோழியை கொடுத்து, ரத்தத்தை உறிஞ்சும்படி பலவந்தப்படுத்தியுள்ளார். கோழி ரத்தத்தைக் குடிக்கா விட்டால், எரியும் கற்பூரத்தை வாயில் போடுவதாக மிரட்டியுள்ளார். வாழை இலை மீது கிலோ கணக்கில் அவலை நிரப்பி, முழுதையும் சாப்பிடும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்.
அந்த இளம்பெண், இந்த சித்திரவதைகளை அனுபவித்த நேரத்தில், அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதை அறிந்த பலரும், பூசாரி மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணும், கொப்பா போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்ததை கூறி புகார் அளித்தார்.
இதையடுத்து, பூசாரி சதீஷ் பாத்ரி தலைமறைவானார். பெங்களூரின் ஜெ.பி., நகரில் பதுங்கியிருந்த அவரை,போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும்
-
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்